தேர்தல் பணியை கண்காணிக்க டாஸ்க் போர்ஸ் அமைப்பு !
டாஸ்க் போர்ஸ்
தேர்தல் பணிகளை மேற்கொள்ளவும், பறக்கும் படை அலுவலர்கள், நிலை கண்காணிப்பு குழுவினரை கண்காணிக்கவும் 'டாஸ்க் போர்ஸ்' அமைக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் லோக்சபா தேர்தல் பணிகளை மேற்கொள்ளவும், பறக்கும் படை அலுவலர்கள், நிலை கண்காணிப்பு குழுவினரை கண்காணிக்கவும் 'டாஸ்க் போர்ஸ்' அமைக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் லோக்சபா தேர்தலை சுமூகமாக நடத்தவும், தேர்தல் தொடர்பான இதர பணிகளை மேற்கொள்ளுதல், பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினரை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக 'டாஸ்க் போர்ஸ்' அமைக்கப்பட்டுள்ளது. தாசில்தார் மற்றும் கூடுதல் தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தாலுகாவிற்கு ஒரு 'டாஸ்க் போர்ஸ்' வீதம் மொத்தமாக 7 குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் ரோந்து செல்வதற்காக, ஒன்றிய சேர்மன்களுக்கு வழங்கப்பட்ட அரசு கார்கள் பயன்படுத்தப்படுகிறது. காரின் பக்கவாட்டு பகுதியில் 'டாஸ்க் போர்ஸ்' என்ற ஸ்டிக்கரும், மேற்பகுதியில் சுழலும் கேமிராவும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வாகனங்களை கலெக்டர் ஷ்ரவன்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது, டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சங்கர், தனி தாசில்தார் பசுபதி ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story