மூவாயிரம் விதைப்பந்துகள் தயாரிக்கும் பணி
உலக தண்ணீர் தினம்
மதுரை கல்மேடு பகுதியில் உள்ள எல்கேபி நகர் நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மூவாயிரம் விதைப்பந்துகள் தயாரிக்கும் பணி தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் ராஜ வடிவேல் முன்னிலை வகித்தார்.
பறவைகளுக்கு தண்ணீர் வைக்க மரங்களில் தண்ணீர் குடுவை கட்டப்பட்டு நீர் ஊற்றப் பட்டது. தொடர்ச்சியாக பசுமை படை மாணவர்களை கொண்டு பல்வேறு விதைகளின் விதைப் பந்துகள் தயாரிக்கும் பயிற்சி பட்டறையை பசுமை ஆர்வலர்கள் முராபாரதி, ராகேஷ், சுகுமாறன் ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு வழங்கினர்.
மாணவ, மாணவிகள் 3000 விதைப்பந்துகளை தயார் செய்தனர். இந்த விதைப் பந்துகளை யானைமலை, அரிட்டாப்பட்டி முதலிய இடங்களில் தூவ வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவோம் என உறுதி மொழி ஏற்றனர். மாணவி அதிபா நன்றி கூறினார். நிகழ்வில் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.