டாஸ்மாக் ஊழியரை தாக்கி பணம் பறிப்பு - மர்ம கும்பல் துணிகரம்
கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் பகுதி தாளக்குடி இடையே வீரநாராயண மங்கலம் என்ற இடத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு நடந்து சென்ற முதியவரிடம் பணம் பறிக்க பைக்கில் வந்த கும்பல் முயற்சி செய்தது. இந்த நிலையில் துவரங்காடு டாஸ்மாக் கடையில் பணியாற்றி வரும் காரவிளை பகுதியை சேர்ந்த ஷோபன் என்பவர் கடந்த 27 ஆம் தேதி கடையை பூட்டிவிட்டு இரவு 11 மணி அளவில் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
இறச்சகுளத்தில் இருந்து சுங்கான் கடை செல்லும் சாலையில் சென்ற போது அங்குள்ள குளத்தின் கரையில் இருந்த ஆலமரம் பகுதியில் இருந்து வெளியே வந்த 6 இளைஞர்கள் சோபனை வழிமறித்து தாக்கியுள்ளனர். அப்போது 2,500 ரூபாய் பறித்துவிட்டு சோபனை துரத்தி விட்டுள்ளனர். இது குறித்த அவர் பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தார். சம்பவம் நடைபெற்ற சாலையில் தற்போது 24 மணி நேரமும் போக்குவரத்து அதிகமாக இருக்கும். இவ்வாழியாக இரவில் இருசக்கர வாகனங்களில் செல்வோரும் அதிகம். இந்த நிலையில் இச்சம்பவம் நடந்தது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.