ஏப்ரல் 21 இல் டாஸ்மாக் விடுமுறை
மகாவீர் ஜெயந்தியை தினத்தை முன்னிட்டு வரும் 21ஆம் தேதி புதுக்கோட்டையில் உள்ள மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் மகாவீர் ஜெயந்தியை தினத்தை முன்னிட்டு வரும் 21ஆம் தேதி புதுகை மாவட்டத்தில் உள்ள டாஸ்மார்க் நிறுவனத்தின் இந்திய தயாரிப்பு அந்நிய மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான கடைகள், மதுபானக்கூடங்கள், மதுபான உரிமை கடைகள், பார்கள் ஆகியவற்றிற்கு விடுமுறை அளிக்கப்படுகிறது இந்த நாளில் மது விற்பனை செய்யக்கூடாது என்று கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார். லோக்சபா தேர்தல் காரணமாக ஏற்கனவே 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story