டாஸ்மாக் விவகாரம்.... கலெக்டர் அலுவலகம் முற்றுகை

கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்த கிராம மக்கள்.

பெரம்பலூர், அருமடல் பிரிவு சாலை பகுதியில் உள்ள முல்லை , முத்து நகர் ஆகிய பகுதியைச் சேர்ந்த கிராம பொதுமக்கள் டிசம்பர் 4.ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

இதனை தொடர்ந்து அவர்கள் தெரிவிக்கையில், தங்கள் பகுதியில் ஏற்கனவே டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வந்தது இதை அப்பகுதி பொதுமக்கள் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததின் அடிப்படையில் கடை மூடப்பட்டு வேறு இடத்தில் கடை நடந்து வருகிறது.

இந்நிலையில் மூடப்பட்ட கடையை மீண்டும் அதே பகுதியில் திறப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிய வருகிறது, ஆகவே அப்பகுதியில் பொதுமக்கள் சிறுவர்கள் பள்ளி குழந்தைகள் சென்று வருவதால் மதுபான கடை வைத்தால் சிரமமாக இருக்கும் எனவே, மதுபான கடை கொண்டு வருவதை நிறுத்த வேண்டும் எனவும், மேலும் தங்கள் குடியிருக்கும் பகுதிக்கு சாலை வசதி, தெரு விளக்கு வசதி இல்லாமல் இருந்து வருகிறது,

இதனால் தங்கள் பகுதி மக்கள் சிரமம் அடைந்து வருகிறோம், எனவே எங்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருப்பதாக தெரிவித்தனர்.

Tags

Next Story