நாகர்கோவில் சென்டர் மீடியனில் மீண்டும் டாரஸ் லாரி மோதி விபத்து !

நாகர்கோவில் சென்டர் மீடியனில் மீண்டும் டாரஸ் லாரி மோதி விபத்து !
 விபத்து
நாகர்கோவில் சென்டர் மீடியனில் மீண்டும் டாரஸ் லாரி மோதி விபத்து ஏற்பட்டதால் இதை தடுக்க மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல்துறையும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் மாநகர் பகுதியில் உள்ள குறுகிய சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. எனவே விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க சாலைகளில் பல இடங்களில் காங்கிரீட் கட்டைகளால் ஆன சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சமீப நாட்களாக இந்த சென்டர் மீடியினால் ஏற்படும் விபத்துக்கள் பெருகிக் கொண்டே வருகிறது. கடந்த சுமார் பத்து நாட்களில் மட்டும் 6- க்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இது கனிம வள கடத்தல் கும்பலின் திட்டமிட்ட விபத்து சம்பவங்களா? என்ற சந்தேகமும் தற்போது பொது மக்களிடையே எழுந்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை வெட்டூர்ணிமடம் பகுதியில் சென்டர் மீடியினில் மோதியதில் டாரஸ் லாரி விபத்துக்குள்ளாகியுள்ளது. காலை 6- மணிக்கு மேல் கனிம வளலாரிகள் நகருக்குள் இயங்க தடை விதிக்கப் பட்டிருந்த நிலையில் இன்று காலை இந்த விபத்து நடந்துள்ளது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல்துறையும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story