திருவட்டாறு அருகே 2 -வது நாளாக டாரஸ் லாரிகள் சிறை பிடிப்பு 

திருவட்டாறு அருகே 2 -வது நாளாக டாரஸ் லாரிகள் சிறை பிடிப்பு 
சிறைபிடிக்கப்பட்ட லாரி
திருவட்டாறு பகுதியில் டாரஸ் லாரிகள் சிறை பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு பகுதியில் கல்குவாரி வந்து செயல்பட்டு வருகிறது செயல்பட்டு வருகிறது. இந்த குவாரிகளில் இருந்து கனரக லாரிகளில் கற்கள் ஏற்றப்பட்டு வெளியிடங்களில் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கல் ஏற்றி கொண்டு வந்த லாரி செங்கோடி பகுதியில் பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்ததும் திருவட்டார் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி டாரஸ் லாரிகள் குறிப்பிட்ட நேரங்களில் இயக்கக் கூடாது என எச்சரித்து அனுப்பினர். இதனை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த நிலையில் நேற்று மீண்டும் பள்ளி கல்லூரி நேரத்தில் டாரஸ் லாரிகள் இயங்கியுள்ளது. இதனை கண்ட பொதுமக்கள் செங்கோடி பகுதியில் திருவட்டார் தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் அன்பரசன் என்பவர் தலைமையில் இரண்டாவது நாளாக டாரஸ் லாரிகளை தடுத்து நிறுத்தும் போராட்டம் நடைபெற்றது. இதில் இரண்டு டாரஸ் லாரிகள் சிறை பிடிக்கப்பட்டது. தகவல் அறிந்த திருவட்டார் போலீசார் க லாரிகளை எடை போட்ட போது அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து லாரிகளை காவல் நிலையம் கொண்டு சென்று 90 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

Tags

Next Story