திருப்பூரில் தவ்ஹீத் ஜமாத் மாவட்ட பொதுக்குழு கூட்டம்

திருப்பூரில் தவ்ஹீத் ஜமாத் மாவட்ட பொதுக்குழு கூட்டம்

மாவட்ட பொதுக்குழு கூட்டம்

திருப்பூர் கோம்பைதோட்டம் பகுதியில் தவ்ஹீத்ஜமாத் மாவட்ட பொது குழு கூட்டம் நடைபெற்றது.
நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும்தவ்ஹீத் ஜமாத் கூட்டத்தில் தீர்மானம். திருப்பூர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருப்பூர் கோம்பைத்தோட்டம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர்கள் செங்கோட்டை பைசல் மற்றும் செய்யது அலி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இதில் மாவட்ட செயலாளர் யாசர் அராபத், பொருளாளர் சிராஜ்தீன், மாவட்ட துணைத்தலைவர் ஜாகிர் அப்பாஸ் மற்றும் துணைச்செயலாளர்கள் ஷேக் பரீத், ஷாஜஹான், காஜா, ஜெய்லானி, ஹனிபா மற்றும் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் ஒன்றிய அரசின் நெருக்கடியால் தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா செய்துள்ளார். இதனை கண்டிப்பது. முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மீதான நம்பிக்கை இன்மை அதிகரித்துள்ளது. எனவே மீண்டும் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story