திருப்பூரில் தவ்ஹீத் ஜமாத் செயற்குழு கூட்டம்!
திருப்பூரில் தவ்ஹீத் ஜமாத் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
திருப்பூரில் தவ்ஹீத் ஜமாத் செயற்குழு கூட்டம்! திருப்பூர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்ட செயற்குழு கூட்டம், திருப்பூர் கோம்பை தோட்டத்தில் உள்ளி பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமை தாங்கி பேசினார். மாநில செயலாளர் சபீர்அலி, மாவட்ட செயலாளர் யாசர் அராபத், பொருளாளர் சிராஜ்தீன், மாவட்ட துணைத்தலைவர் ஜாகிர் அப்பாஸ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான ஓட்டு மற்றும் ஒப்புகளை சீட்டின் எண்ணிக்கையை ஒப்பிட்டு உறுதிப்படுத்திய பிறகே தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும். இஸ்ரேலுடனான தூதரக உறவை இந்தியா துண்டித்துக்கொள்ள வேண்டும். இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை 7 சதவீதம் அதிகரிக்க வேண்டும். போதை பொருட்கள் விற்பனை செய்கிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.