வரி செலுத்துவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

வரி செலுத்துவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

வரி செலுத்துவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தில் வருமான வரித்துறை சார்பில் "வரி செலுத்துவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தில் திருநெல்வெலி வருமான வரித்துறை சார்பில் "வரி செலுத்துவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி வருமான வரித்துறை இணை ஆணையர் மனோஜ் பிரகாஷ் மற்றும் உதவி ஆணையர் காசி சங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வருகை புரிந்தனர். தூத்துக்குடி வருமான வரி அதிகாரி செண்பகம் வரவேற்புரையாற்றினார். அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத் தலைவர் தமிழரசு மற்றும் முன்னாள் தலைவர் ஜோ பிரகாஷ் ஆகியோர் பேசுகையில்,

"வருமான வரி செலுத்துவது குறித்து விழிப்புனர்வு நிகழ்ச்சி நடத்துவதன் மூலம் வரி செலுத்துவோர்கள் தாங்கள் வருமான வரி செலுத்துவது, ரிட்டன் தாக்கல் செய்வது பற்றிய விளக்கங்களை தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக அமையும் என்றனர்.

சிறப்பு விருந்தினர்கள் பேசுகையில் "மத்திய நேரடி வரிகள் வாரியம் எடுத்துள்ள புதிய முயற்சிகள் குறித்தும், டிஜிட்டல் யுகத்தில் வரி செலுத்துவோரின் பங்கு மற்றம் கடமைகள், வரி செலுத்துவோரின் குறைகளுக்கான தீர்வுகள் மற்றும் அதற்கான வழிமுறைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தனர். தற்சமயம் வருமானவரி செலுத்துவோருக்கு வருமானவரியை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நான்கு தவணைகளாக செலுத்தும்படி இலகுவாக்கப்பட்டுள்ளது எனவும், வருமானவரி வரி ரிட்டன் தாக்கல் செய்வது பற்றியும் தெளிவாக கூறினர்.

இந்நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த அனைவரும் எழுப்பிய சந்தேகங்களுக்கு தெளிவாக விளக்கமளித்தனர். நிறைவாக வருமானவரி அதிகாரி சிவபாலன் நன்றியுரை வழங்கினார்.

Tags

Next Story