திருப்பூரில் கார் ஓட்டுநர்கள் வடக்கு காவல் நிலையத்தை முற்றுகை

திருப்பூரில் ரெட்டாக்ஸி கார் ஓட்டுநர்கள் வடக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

திருப்பூர் ரயில் நிலையத்தில் தனியார் டாக்ஸி ஓட்டுனருக்கும் - டூவீலர் ஸ்டாண்டில் பணியாற்றி வரும் பெண்ணிற்கும் ஏற்பட்ட கைகலப்பு -ரயில்வே காவலர் டாக்ஸி ஓட்டுநரை தாக்கியதால் தங்களது கால் டாக்ஸிகளுடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட டாக்கி ஓட்டுனர்கள்! திருப்பூர் ரயில் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர்.

இங்குள்ள வாகன நிறுத்துமிடமானது தனியாருக்கு குத்தகை விடப்பட்டு ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் தங்களது இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தியுள்ளனர். அதேபோல் மூன்று வருட குத்தகை அடிப்படையில் தனியார் டாக்ஸி ( ரெட் டாக்சி ) களானது மற்றொருபுறம் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே இன்று தனியார் டாக்ஸி ( ரெட் டாக்சி ) ஓட்டுனர் ஒருவர் டாக்ஸி நிறுத்தும் இடத்தை விட்டு விட்டு மற்றொரு இடத்தில் நிறுத்தியதாக கூறப்படுகிறது.இதனால் டாக்ஸி ஓட்டுனருக்கும் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் பணியாற்றி வரும் பெண்ணிற்க்கும் வாய் தகறாக ஏற்பட., ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே காவலர், ரயில் நிலையத்தில் பார்க்கிங் ஏரியாவில் பணியாற்றி வரும் பெண்ணிற்கு ஆதரவாக பேசியதோடு கால் டாக்ஸி ஓட்டுனரை தாக்கியதாக கூறப்படுகிறது இதனால் ஆத்திரம் அடைந்த கால் டாக்ஸி ஓட்டுநர்கள் .

ஓட்டுநரை தாக்கிய ரயில்வே காவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தங்களது கால் டாக்ஸிகளுடன்., திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர் . இதையடுத்து போலீசார் கால் டாக்ஸி ஓட்டுனரையும்., டூவீலர் ஸ்டாண்டில் பணியாற்றி வரும் பெண்ணையும் அழைத்து சமரசம் செய்தததையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது. டாக்சி ஓட்டுனர்கள் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் சிறிது நேரம் குமரன் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது

Tags

Next Story