கொங்கணாபுரம்TCMS கிளையில் ரூ.12.50 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

X
Edappadi King 24x7 |30 Nov 2024 7:48 PM ISTஎடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் TCMS கிளையில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 550 மூட்டை பருத்தி, ரூபாய் 12.50லட்சத்திற்கு விற்பனையானது.
கொங்கணாபுரத்தில் TCMS கிளை செயல்பட்டு வருகிறது. சனிக்கிழமை இன்று பருத்தி ஏலம் நடைபெருகிறது.இக்கிளைக்கு எடப்பாடி, ஜலகண்டாபுரம், கொளத்தூர், ஓமலூர், சங்ககிரி, கல்வடங்கம், சின்னப்பம்பட்டி, மகுடஞ்சாவடி,மற்றும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, மாவட்டங்களிலிருந்து விவசாயிகள் பருத்தி மூட்டைகளை கொண்டுவந்து விற்பனை செய்து வருகின்றனர். கொங்கணாபுரம் கிளைக்கு 160 விவசாயிகள், 550 மூட்டைபருத்தி விற்பனைக்காக கொண்டுவந்திருந்தனர்.பருத்தி ஏலத்தில் எடுப்பதற்காக சேலம், ஈரோடு, பெருந்துறை,திருப்பூர், கோவை, ஆகியபகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் BT ரகபருத்தி ஒரு குவிண்டால் ரூ.6249முதல் ரூ.7600 வரையும் கொட்டுரகபருத்தி ஒரு குவிண்டால் ரூ.3520முதல் 4540வரை விலைபோனது. இன்று சனிக்கிழமை 550 மூட்டை பருத்தி ரூ.12.50லட்சத்திற்கு ஏழவிற்பனை நடைபெற்றது.
Next Story
