டீக்கடை உரிமையாளர் கொலை - விவசாயிக்கு ஆயுள் !

டீக்கடை  உரிமையாளர் கொலை -  விவசாயிக்கு ஆயுள் !

 நீதிமன்றம்

பொது வழி பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்த நிலையில் டீக்கடை உரிமையாளரை கொலை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த கடுவனுார் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி மகன் அரசு,40; டீ கடை உரிமையாளர். பக்கத்து வீட்டை சேர்ந்தவர் முனியன் மகன் வெங்கடேசன்,52; விவசாயி. இருவருக்கும் பொது வழி பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி ஏற்பட்ட பிரச்னையின் போது, வெங்கடேசன் உள்ளிட்ட அவரது தரப்பை சேர்ந்த 6 பேர் அரசுவை அசிங்கமாக திட்டி, இரும்பு கம்பியால் தாக்கினர். படுகாயமடைந்த அரசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புகாரின் பேரில், கடுவனுார் முனியன் மகன் வெங்கடேசன்,52; அவரது மனைவி அரசிளங்குமாரி,47; தாய் ராணி,76; மகள்கள் சவுந்தர்யா,24; கவுசல்யா,20; குமார் மனைவி தங்கமணி,40; ஆகியோரை கைது செய்த சங்கராபுரம் போலீசார், அவர்கள் மீது கள்ளக்குறிச்சி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கில் அரசு தரப்பில் ராஜவேல் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி கீதாராணி, குற்றம் சாட்டப்பட்ட வெங்கடேசனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.14 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், அரசிளங்குமாரிக்கு ரூ.2 ஆயிரம்; ராணி, தங்கமணி, சவுந்தர்யா, கவுசல்யா ஆகியோருக்கு தலா ரூ. 4 ஆயிரம் அபாராதம் விதித்து உத்தரவிட்டார்.

Tags

Read MoreRead Less
Next Story