அடையாளம் தெரியாத வாகனம் மோதி டீக்கடை ஊழியா் பலி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி டீக்கடை ஊழியா் பலி
X

பைல் படம் 

திருச்சியில் நடந்து சென்ற டீக்கடை ஊழியா் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் உயிரிழந்தார்.
திருச்சி முதலியாா்சத்திரம் முத்துராஜா தெருவைச் சோ்ந்தவா் கலியபெருமாள் (56), அப்பகுதி டீக்கடை ஊழியா். செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இவா் வேலை முடிந்து வீட்டுக்கு மாநகராட்சி அலுவலகம் அருகே நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயமடைந்தாா். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றபோது கலியபெருமாள் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Tags

Next Story