பள்ளி மாணவனை தாக்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்

பள்ளி மாணவனை தாக்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்

கோப்பு படம் 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள புளியம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு கணித ஆசிரியராக அன்புமணி என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு 6-ம் வகுப்பு படித்து வரும் மாணவரை அன்புமணி அடித்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அந்த மாணவன் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார் . மேலும் இதுதொடர்பாக மாணவனின் பெற்றோர் ஓமலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஆசிரியர் அன்புமணி மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சேலம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்தோஷ் விசாரணை நடத்தினார். பின்னர் மாணவனை தாக்கிய ஆசிரியர் அன்புமணியை பணி இடைநீக்கம் செய்து கல்வி அலுவலர் சந்தோஷ் உத்தரவிட்டார்.

Tags

Next Story