தேர்தல் பணி விலக்கு கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் குவியும் ஆசிரியர்கள்

தேர்தல் பணி விலக்கு கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் குவியும் ஆசிரியர்கள்
தேர்தல் பணியில் இருந்து விலக்கு கேட்கும் ஆசிரியர்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் பணி விலக்கு கேட்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு ஏராளமான ஆசிரியர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

கன்னியாகுமரி மக்களவைத் தேர்தல் மற்றும் விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு ஏற்ப முன்கூட்டியே பள்ளி தேர்வுகளை முடிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் மக்களவைத் தேர்தலுக்கு கன்னியாகுமரி தொகுதியில் 8 ஆயிரத்து 150 அரசு பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், பேராசிரியர் உள்ளிட்டோர் தேர்தல் பணியில் ஈடுபடுத்த உள்ளனர்.

இதற்காக தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்க ஆசிரியர்களுக்கு நியமன ஆணைகள் தலைமை ஆசிரியர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதனை போன்று பேராசிரியர்களும் நியமனையில் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ஒப்புதல் கடிதங்களையும் அவர்கள் பெற்றுள்ளனர். இந்த நிலையில் தேர்தல் பணிகளில் இருந்து தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் பலரும் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளை மொய்த்து வருகின்றனர்.

நீண்ட கால நோய் தொற்று, மகப்பேறு விடுப்பு போன்ற காரணங்கள் உள்ளவர்கள் தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றனர். அவர்கள் உரிய ஆதாரங்களுடன் தலைமை ஆசிரியர்கள் பரிந்துரையுடன் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் மற்றவர்களும் தேர்தல் பணியில் இருந்து விலக்கு கேட்டு வருவதால் அதிகாரிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

Tags

Next Story