மாணவர்களின் வீட்டிற்கு சென்று பள்ளிக்கு வர ஆசிரியர்கள் அழைப்பு

மாணவர்களின் வீட்டிற்கு சென்று பள்ளிக்கு வர ஆசிரியர்கள் அழைப்பு
 வாக்கூரில் மாணவர்களின் வீட்டிற்கு சென்று பள்ளிக்கு வர ஆசிரியர்கள் அழைப்பு விடுத்தனர்.
வாக்கூரில் மாணவர்களின் வீட்டிற்கு சென்று பள்ளிக்கு வர ஆசிரியர்கள் அழைப்பு விடுத்தனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றியம் வாக்கூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு ஆசிரியராக பணிபுரிந்தவர் கருணாகரன் (வயது 32). இவர் பள்ளி மாணவிகளிடையே பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து கடந்த மாதம் 28-ந்தேதி விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து கருணாக ரணை கைது செய்தனர். இதையடுத்து அப்பள்ளிக்கு வாக்கூர் கிராம மக்கள் தங்கள் குழந்தைகளை அனுப்ப மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், வேளாண் கண்காணிப்பு குழு உறுப்பினர் எத்தி ராசன் தலைமையில், கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன், பாசன சங்க தலைவர் நாகராஜன், கிராம முக்கிய பிரமுகர்கள் ராஜேந்திரன், கலிவரதன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வராத மாணவர்களின் வீட்டிற்கு நேரில் சென்றனர். அப்போது பெற்றோர்களிடம் கல்வியின் முக்கியவத்துவத்தை எடுத்து கூறி மாணவர் களை மீண்டும் பள்ளிக்கு அனுப்பி வையுங்கள் என்று கூறினர். இதையடுத்து பெற்றோரும் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வைப்பதாக உறுதி அளித்தனர்.

Tags

Next Story