விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து போராட்டம்
விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டம்
திண்டுக்கலில் விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.
திண்டுக்கல் அவர் லேடி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்த முகாம் நடைபெற்று வருகிறது. நாளை தேர்தல் பணிக்கு செல்ல வேண்டி இருப்பதால் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று திருத்தும் பணி நடைபெறவில்லை. விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பழனி கல்வி மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் காலை மட்டுமே விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறுகிறது. திண்டுக்கல் விடைத்தாள் திருத்தம் மையத்தில் மதியமும் விடைத்தாள் திருத்த வேண்டும் என ஆசிரியர்களை முகாம் அலுவலர் வலியுறுத்துவதால் விடைத்தாள் வாங்க மறுத்து ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
Next Story