சேலத்தில் 4-வது நாளாக தொடரும் போராட்டம்

சேலத்தில் 4-வது நாளாக தொடரும் போராட்டம்

போராட்டம் 

சேலத்தில் உண்ணாவிரத போராட்டத்துக்கு முயன்ற 176 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

தி.மு.க. அரசின் தேர்தல் வாக்குறுதியான இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றை கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் இடைநிலை ஆசிரியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதையொட்டி சேலம் கோட்டை மைதானத்தில் 4-வது நாளாக நேற்று ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அருள், பொருளாளர் பிரசாத் உட்பட 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். அப்போது அவர்கள் கூறியதாவது:- 31.5.2009 வரை பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களு க்கு 8,370 அடிப்படை ஊதியமாகவும், 1.6.2009-க்கு பிறகு போராட்டம் நடத்திய ஆசிரியர்கள். பணியில் சேர்ந்த இடநிலை ஆசிரியர்களுக்கு 5200 மட்டுமே அடிப்படை ஊதியமாக நிர்ணயம் செய்யப்பட்டதால் கடந்த 14 ஆண்டுகளாக பாதி அளவிற்கு ஊதிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் இல்லாவிட்டால் பணியை புறக்கணித்து இனிவரும் நாட்களிலும் போராட்டம் தொடரும் என்று கூறினர். தொடர்ந்து சாலையோரம் அமர்ந்து உண்ணாவிரதம் இருக்க முயற்சி செய்தனர். உண்ணாவிரதம் இருக்க முயன்றதால் 176 ஆசிரியர்களையும் போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story