கல்வித்துறை அரசாணை - 243 ஐ ரத்து செய்ய வலியுறுத்தி ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கல்வித்துறை அரசாணை - 243 ஐ ரத்து செய்ய வலியுறுத்தி ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கல்வித்துறை அரசாணை - 243 ஐ ரத்து செய்ய வலியுறுத்தி ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சேதுபாவாசத்திரம் வட்டாரக்கிளை சார்ப்பில் நடைபெற்ற கனவ ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

அரசாணை எண்-243 ஐ திரும்பப் பெற்று, பழைய நடைமுறையில் முன்னுரிமை அளிக்க வேண்டும். பதவி உயர்வை பழைய நடைமுறையிலேயே செயல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாட்டை சரி செய்து, சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும். பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். அரசுப் பள்ளிக்கு வழங்குகிற அனைத்து சலுகைகளையும், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும். ஈட்டிய விடுப்பு, அகவிலைப்படி நிலுவை உடனடியாக வழங்க வேண்டும். உயர்கல்வி படிப்பிற்கு ஊக்க ஊதியம் தொடர்ந்து வழங்க வேண்டும். எமிஸ் பணியில் இருந்து ஆசிரியர்களை விடுவித்திட வேண்டும். ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றிட வேண்டும்.

தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சேதுபாவாசத்திரம் வட்டாரக்கிளை சார்பில், குருவிக்கரம்பையில் உள்ள வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்டாரத் தலைவர் மு. மகேந்திரன் தலைமை வகித்தார். வட்டாரச் செயலாளர் ஏ.வி.சந்திரசேகர் வரவேற்றார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் சுப. குழந்தைசாமி பேசினார். நிறைவாக வட்டாரப் பொருளாளர் க.திருஞானவேல் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பொ.சிங்காரவேலு, அ.சத்தியமூர்த்தி, ம.பரமசிவம், செந்தாமரை, நிர்வாகிகள் கலைச்செல்வி, சண்முகவள்ளி, வட்டார துணைச் செயலாளர் ஏ.கே.நீலா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story