கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
அரவக்குறிச்சி வட்டார கல்வி அலுவலகம் முன் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டார கல்வி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில், வட்டார ஒருங்கிணைப்பாளர் முனியப்பன் தலைமையில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது, அரசாணை எண் 243 ரத்து செய்ய வலியுறுத்தியும், 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
Next Story