நிலக்கடலை சாகுபடியில் தொழில்நுட்ப முறைகள் வேளாண் அதிகாரி ஆலோசனை

தர்மபுரி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் இளங்கோவன் நிலக்கடலை சாகுபடியில் தொழில்நுட்ப முறைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
உலக நாடுகளில், எண்ணெய் வித்துக்களை அதிகம் உற்பத்தி செய்வதில், இந்தியா முக்கிய இடத்தை வகிக்கிறது. நிலக்கடலை உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நிலக்கடலை எண்ணெய் உற்பத்திக்காக மட்டுமின்றி, தரம் வாய்ந்த புரத சத்துக்கள் நிறைந்த உணவுப் பொரு ளாகவும் பயன்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில், சுமார் 20 ஆயிரம் ஹெக் டர் பரப்பில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகி றது. பெருகி வரும் மக் கள் தொகைக்கு ஏற்ப. நிலக்கடலை மகசூலை அதிகரிக்க, தரமான விதைகளை பயன்படுத் துவது முக்கியம் ஆகும். விதைப்பதற்கு சிறந்த பருவம் ஜூன், ஜூலை மற்றும் டிசம்பர், ஜனவரி மாதங்கள் ஆகும். உயர் விளைச்சல் ரகங்கள் கதிரி 6. கதிரி 9. தரணி, விஆர்ஐ 7, வி.ஆர்ஐ 8, டிஎம்வி 14 போன்றவற்றை விதைப்ப தன் மூலம், அதிக விதை உற் பத்தி செய்யலாம். குறைந்த வயதுடைய, பூச்சி நோய் எதிர்ப்பு திறன் கொண்ட ரகங்களை பயிர் செய்து, கூடுதல் லாபம் பெற முடியும். நுண்ணூட்டச் சத்துக் கள் பயிர் குறைபாடு இன்றி வளரவும், மண்ணில் உள்ள சத்துக்களை எடுக்கவும். பேரூட்ட சத்துக்களான தழை,மணி மற்றும் சாம்பல் சத்துக்களை அடி உரமாக இடவேண்டும் போராக்ஸ் மட்டும் நிலக்கடலை நுண் ணூட்ட சத்து கலவையை விதைப்பு முடிந்தவுடன் நிலத்தின் மேல் இடவேண் டும். பின் செய் நேர்த்தி, விதைத்த 3 நாட்களுக்குள் வயலில் ஈரம் இருக்கும் போது, களைக்கொல்லி தெளிக்க வேண்டும் விதைத்த 45 நாட்களுக்கு பிறகு, களையை கட்டுப்ப டுத்தி, ஜிப்சம் இட்டு மண் அணைப்பதால், காய்கள் திரட்சியாகவும், அதிக எடை கொண்டதாகவும் உருவாகிறது.சரியான அறுவடை தருணத்தில், செடியின் நுனியிலே இலை மஞ்ச ளாகமாறுதல் மற்றும் அடி இலைகள் காய்ந்து உதிரும். செடிகளில் இருந்து பறிக் கப்பட்ட காய்களை 2-3 நாட்கள் வெயிலில் உலர்த்த வேண்டும். தரம் பிரித்த காய்களை நல்ல கோணிப் பைகளில் சேமித்து, மரக் கட்டை அல்லது பலகைகளில் மேல் அடுக்க வேண்டும் சேமிப்பு கிடங்கு நல்ல காற்றோட்டமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story