விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி

விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி

 அவிநாசி அருகே துலுக்கமுத்தூரில் விவசாயிகளுக்கான தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது. 

அவிநாசி அருகே துலுக்கமுத்தூரில் விவசாயிகளுக்கான தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.

அவினாசி வட்டம் துலுக்கமுத்தூரில் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்டம், ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள் திட்டத்தின் கீழ், பயிர் சாகுபடி சார்ந்த விவசாயிகளுக்கான ராபி பருவத்திற்கான முதல் கட்ட தொழில்நுட்ப பயிற்சி நடந்தது. பயிற்சியில் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின் திட்ட ஆலோசகர் அரசப்பன், அவினாசி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அன்பழகி, உதவி வேளாண்மை அலுவலர் நாகராஜ், அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர் கிருஷ்ணவேணி மற்றும் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.

அவினாசி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அன்பழகி வேளாண்மை திட்டங்கள் குறித்தும், மானிய விவரங்கள் குறித்தும் பேசினார். தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்ட ஆலோசகர் அரசப்பன் தானியங்களில் உள்ள ஊட்டச்சத்து விவரங்கள் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பேசினார். இதற்கான ஏற்பாடுகளை அவினாசி வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story