திருக்களூரில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி

திருக்களூரில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி

பயிற்சி முகாம் 

திருக்களுரில் நடந்த வேளாண் தொழில்நுட்ப பயிற்சி முகாமில் அதிகாரிகள் பல்வேறு விவசாய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.

ஆழ்வார்திருநகரி வட்டார, வேளாண்மை, உழவர் நலத் துறை மூலம் அட்மா மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நெல் பின் சாகுபடி முறைகள் என்ற தலைப்பில் திருக்களுர் கிராமத்தில் நடைபெற்றது. இப்பயிற்சில் வட்டார வேளாண்மை உதவி இயக் குநர் சுரேஷே் தலைமை வகித்து பயிற்சியின் நோக் கம், நெல் பின் உளுந்து சாகுபடி தொழில்நுட்பம் மற்றும் அரசின் மானியத் திட்டங்கள் குறித்தும் தெரி வித்தார்.

துணை வேளாண் மை அலுவலர் தங்கமாரி யப்பன் வேளாண்மைதுறை மூலம் வழங்கப்படும் திட் டங்கள் மற்றும் நெல் பயிர் சாகுபடி போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து கூறினார். வாகைக் குளம் வேளாண் அறிவியல் மைய தொழில்நுடப வல்லு நர் முருகன்,நெல் சாகுபடி யில் களை நிர்வாகம், நீர் மேலாண்மை, பயிர் பாது காப்பு, குறித்து விவசாயிக ளுக்கு கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ஆழ்வார்திருநகரி உதவி வேளாண்மை அலுவலர் திவ்யாபாலா, தொழில்நுட்ப மேலாளர் ஜேசுதாசன், உதவி தொழில்நுட்ப மேலாளர் நளினி, சூசைமாணிக் கம் ஆகியோர் செய்திருந்தனர். உதவி வேளாண்மை அலுவலர் செல்வமணி நன்றி கூறினார்.

Tags

Read MoreRead Less
Next Story