வேளாண் பொருட்களின் மதிப்பு கூட்ட தொழில்நுட்ப பயிற்சி

வேளாண் பொருட்களின்  மதிப்பு கூட்ட தொழில்நுட்ப பயிற்சி

தொழில்நுட்ப பயிற்சி 

வேளாண்மை உழவர் நலத்துறை அட்மா திட்டத்தில் ராராந்திமங்கலம் கிராமத்தில் அனைத்து பொருட்களின் மதிப்பு கூட்ட தொழில்நுட்ப பயிற்சி நடத்தப்பட்டது.

ராராந்திமங்கலம் ஊராட்சியில் அட்மா திட்ட தொழில்நுட்ப பயிற்சி நாகை மாவட்டம் திருமருகல் வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை அட்மா திட்டத்தில் ராராந்திமங்கலம் கிராமத்தில் அனைத்து பொருட்களின் மதிப்பு கூட்ட தொழில்நுட்ப பயிற்சி நடத்தப்பட்டது.

பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்கலா தலைமை தாங்கினார்.இப்பயிற்சியில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகவரித்துறை வேளாண் அலுவலர் சங்கர நாராயணன் கலந்துக் கொண்டு வேளாண்மை விற்பனை துறையில் செயல்படுத்தும் பிரதம மந்திரியின் சிறு குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் மூலம் 35 சதவீதம் மானியத்தில் விவசாயிகள் பயன்பெற்று தங்கள் விளைவிக்கும் விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும் போது விவசாயிகள் அதிகமாக லாபம் ஈட்டலாம் எனவும்,மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் மூலம் விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை தங்கள் பண்ணையிலேயே போக்குவரத்து செலவின்றி விற்பனை செய்து பயனடையலாம் என தெரிவித்தார்.

இக்கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வட்டார தொழில்நுட்ப மேலாளர் செந்தில்குமார் செய்து இருந்தார். முன்னதாக உதவித் தொழில் நுட்ப மேலாளர் ராஜ்குமார் வரவேற்றார். முடிவில் உதவித் தொழில் நுட்ப மேலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

Tags

Next Story