வாழையில் தொழில்நுட்பம்: வேளாண் மாணவா்கள் செயல்விளக்கம்

வாழையில் தொழில்நுட்பம்: வேளாண் மாணவா்கள் செயல்விளக்கம்
 ஆலங்குளத்தில் வாழையில் தொழில்நுட்பம் குறித்து வேளாண் மாணவர்களுக்கு செயல்விளக்கம் நடந்தது.
ஆலங்குளத்தில் வாழையில் தொழில்நுட்பம் குறித்து வேளாண் மாணவர்களுக்கு செயல்விளக்கம் நடந்தது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இறுதியாண்டு மாணவா்கள் வாழை விவசாயிகளுக்கு கொத்து மூடும் நுட்பத்தை செய்து காட்டினா். கோணிப்பை அல்லது பாலிதீன் மூலம் கொத்துக்களை மூடுவது, வெயில், அனல் காற்று மற்றும் தூசி ஆகியவற்றில் இருந்து வாழைப் பழங்களை பாதுகாக்கிறது. கவா்ச்சியான நிறத்தைப் பெற, கேவன்டிஷ் மற்றும் நேந்திரன் வாழைப்பழங்களில் குலைகளை மூடுவது நடைமுறையில் உள்ளது. துளையிடப்பட்ட பாலிதீன் பைகளை கொத்து மூடுவதற்கு பயன்படுத்தினால் 15-20% மகசூல் அதிகரிக்கும் என விவசாயிகளுக்கு மாணவா்கள் ஆலோசனை வழங்கினா்.

Tags

Next Story