கரும்பு சாகுபடியில் தொழில்நுட்பம் - மாணவிகள் செயல்முறை கலந்தாய்வு.

கரும்பு சாகுபடியில் தொழில்நுட்பம் -  மாணவிகள் செயல்முறை கலந்தாய்வு.

செயல்முறை கலந்தாய்வு.

மண்ணச்சநல்லூர் அருகே உளுந்தங்குடி கிராமத்தில் கரும்பு சாகுபடியில் கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பம் குறித்து வேளாண் கல்லூரியின் இறுதியாண்டு மாணவிகள் செயல்முறை கலந்தாய்வை நடத்தினர்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உளுந்தங்குடி கிராமத்தில் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரியின் இறுதியாண்டு மாணவிகள் கிராம வேளாண் பணி அனுபவப் பயிற்சி திட்டத்தின் கீழ் கரும்பு சாகுபடியில் கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பம் குறித்து செயல்முறை கலந்தாய்வை நடத்தினர். இதில் மண்ணச்சநல்லூர் வேளாண்மை உதவி அலுவலர் பார்த்திபன் கலந்து கொண்டு கரும்பு நடவு, கட்டை கரும்பு பராமரிப்பு செயல்முறை விளக்கத்தினை அளித்தார்.

மேலும் குழித்தட்டு நாற்றங்கால் முறையில் கரும்பு நடவு, ஒரு பரு கரனை, கரும்பு நடவு, தோகை உரித்தல், விட்டம் கட்டுதல் போன்ற செயல்பாடுகளை தெளிவாக எடுத்துரைத்தார். அத்துடன் பொதுவாக செய்யும் பராமரிப்பு முறையினை பற்றியும் தெளிவாக விளக்கினார். இந்நிகழ்வில் வேளாண் கல்லூரி மாணவிகள் திவ்ய ரேச்சல், ஹெர்லின், இஷ்ரத் ரிகானா,ஜனனி, ஜெயந்திகா, ஜெனோ வெர்ஜின், ஜனனி மற்றும் ஜோதி முகுந்தா ஆகியோர் கொண்ட குழு மாணவிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story