வாலிபர் தற்கொலை
கரூர் மாவட்டம், புகலூர் தாலுக்கா, விசுவநாதபுரி, அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் வயது 47. ஜெகநாதன் அண்மை காலமாக மது போதைக்கு அடிமையானார். இதனால், அவரது குடும்பத்தில் பிரச்சனைகள் இருந்து வந்தது. இதன் காரணமாக, டிசம்பர் 24ஆம் தேதி மது போதையில் இருந்த ஜெகநாதன் அரலி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த ஜெகநாதனின் மகன் சந்துரு, உடனடியாக ஜெகநாதனை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். ஜெகநாதனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
எனவே, இது குறித்து சந்துரு க.பரமத்தி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த ஜெகநாதன் உடலை உடற் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் க. பரமத்தி காவல்துறையினர்.