போலி இ-சேவை மையம் நடத்திய வாலிபர் கைது - திண்டிவனத்தில் பரபரப்பு

போலி இ-சேவை மையம் நடத்திய வாலிபர் கைது - திண்டிவனத்தில் பரபரப்பு

பைல் படம் 

திண்டிவனத்தில் முறையான உரிமம் இன்றி இ-சேவை மையம் நடத்தி போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த இளைஞரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சஞ்சீவிராயன்பேட்டை முதல்தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் சதீஷ்குமார் (வயது 30). இவர் திண்டிவனம்-செஞ்சி சாலை பகுதியில் தனியார் ஸ்டூடியோ முன்புறம் கணினி மையம் நடத்தி வருகிறார். இங்கு போலி ஆவணங்கள் தயாரித்து வழங்குவதாக திண்டிவனம் வட்ட வழங்கல் அலுவல கத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் தனி தாசில்தார் பாவேந்தன், வருவாய் அலுவலர் பிரபாகன் மற்றும் ஊழியர்கள் போலீசார் குறிப்பிட்ட கணினிமையத்துக்குசென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முறையான உரிமம் இன்றி இ-சேவை மையம் நடத்தி போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து ஆவணங்கள் தயாரிக்க பயன்படுத்திய கணினி, பிரிண்டர். யு.பி.எஸ். கருவி மற்றும் போலியாக தயாரிக்கப்பட்ட ஆதார் அட்டை. வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தாசில்தார் பாவேந்தன் திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்ப திந்து சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story