சேலத்தில் டீ மாஸ்டரை தாக்கிய வாலிபர் கைது

சேலத்தில் டீ மாஸ்டரை தாக்கிய வாலிபர் கைது
X

கைது

சேலத்தில் டீ மாஸ்டரை தாக்கிய வாலிபர் கைது.போலீசார் விசாரணை.
சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 41), டீ மாஸ்டர். பட்டை கோவில் பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் (30). சம்பவத்தன்று இவர் பொன்னம்மாபேட்டைக்கு வந்தார். அப்போது அவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சிலம்பரசன், வினோத்குமாரை தாக்கி உள்ளார். இது குறித்து வினோத்குமார் அம்மாபேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்தனர்.

Tags

Next Story