கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது

பைல் படம் 

தூத்துக்குடி பூங்காவில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடியில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி தலைமையிலான போலீசார் செல்சீனிகாலனி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அங்கு உள்ள பூங்காவில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டு இருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் வள்ளிநாயகபுரத்தை சேர்ந்த கண்ணன் மகன் சிவசூர்யா (19) என்பது தெரியவந்தது. அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்து இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசூர்யாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.



Tags

Next Story