இறுதி ஊர்வலத்தில் நடனமாடியதை கண்டித்தவர் மீது வாலிபர் தாக்கு

இறுதி ஊர்வலத்தில் நடனமாடியதை கண்டித்தவர் மீது வாலிபர் தாக்கு

 லால்குடி அருகே அரியூரில் உறவினரின் இறுதி ஊர்வலத்தில் நடனமாடியதை கண்டித்தவர் மீது தாக்குதல் நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

லால்குடி அருகே அரியூரில் உறவினரின் இறுதி ஊர்வலத்தில் நடனமாடியதை கண்டித்தவர் மீது தாக்குதல் நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அரியூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் 50 வயதான காரலன். அதே பகுதி சவேரியார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் 30 வயதான சாம் ஆண்டனி. காரலரின் உறவினர் சேகர் இறந்ததை யடுத்து அவரது இறுதி ஊர்வலம் நடைபெற்றது. அந்த இறுதி ஊர்வலத்தின் போது சாம் ஆண்டனி நடனமாடி வந்துள்ளார். இதை காரலன் கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சாம் ஆண்டனி காரலனை தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார்.

இதில் காயமடைந்த காரலன் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து லால்குடி காவல் நிலையத்தில் காரலன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து சாம் ஆண்டனியை கைது செய்தனர். பின்னர் லால்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story