குடும்பத் தகராறு காரணமாக வாலிபர் தற்கொலைக்கு முயற்சி

குடும்பத் தகராறு காரணமாக வாலிபர் தற்கொலைக்கு முயற்சி

தற்கொலை முயற்சி 

திருப்பத்தூர் மாவட்டம், புதூர் நாடு பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக பூச்சிக்கொல்லி மருந்து குடித்து வாலிபர் தற்கொலைக்கு முயற்சியில் ஈடுப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாது மலை புதூர் நாடு பகுதியில் உள்ள மலை கிராமத்தில் கூலித்தொழிலாளி அசோகன் மகன் மாரிமுத்து இவர் குடும்ப தகராறு காரணமாக வீட்டில் வைக்கப்பட்டிருந்த பூச்சிக்கொல்லி மருந்து குடித்து மயங்கி நிலையில் உள்ளார்.அப்பகுதியில் உள்ளவர்கள் பார்த்து உடனடியாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story