குடும்ப பிரச்னையால் வாலிபர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை !

X
தற்கொலை
தென்காசி அருகே குடும்ப பிரச்னையால் வாலிபர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துக்கொண்டார்.
தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள ஆழ்வார்குறிச்சி அடுத்த ராஜாங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (38). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி வீட்டில் இருந்த விஷம் குடித்த தற்கொலைக்கு முயனார்.
இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் வாலிபரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் குடும்ப பிரச்னை காரணமாக, இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
