வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
வாசுதேவநல்லூர் அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
தென்காசி மாவட்டம், ராயகிரி பகுதியில் கடன் கொடுத்தவர் திரும்ப தராததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகே ராயகிரி கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரையா மகன் காசி (வயது 38). இவர் கப்பலில் கிரேன் ஆப்ரேட்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. குழந்தைகள் இல்லை. காசியின் தாயார் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கீழே விழுந்ததில் படுகாயடைந்தார். அவர் நாகர் கோவிலில் தங்கியி ருந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். காசி தன்னுடன் கப்பலில் பணியாற்றும் பஞ்சாப்பை சேர்ந்த நபருக்கு கிரிடெட் கார்டு மூலம் ரூ. 2 லட்சம் கொடுத்துள்ளார்.

ஆனால் அவர் அப்பணத்தை திருப்பிக் கொடுக்க வில்லை. இதனால் காசி மன வருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் காசி தனது தாயாரை பார்ப்பதற்காக ஊருக்கு வந்துள்ளார். இவரது மனைவி இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்குச் சென்று விட்டு அவரது பெற்றோர் வசிக்கும் திருவேட்ட நல்லூருக்குச் சென்றுள் ளார். இதனால் தனிமையில் வீட்டில் இருந்த காசி மன வேதனையில் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து சிவகிரி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று காசியின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story