காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை

காதல் தோல்வியால்  வாலிபர் தற்கொலை
தற்கொலை
சேலத்தில் காதல் தோல்வியால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

சேலம் அடுத்த வேம்படிதாளம் பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது 23). இறைச்சி வெட்டும் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அழகர்சாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அழகர்சாமி ஒரு பெண்ணை காதலித்து வந்ததும், ஆனால் அவரது காதல் தோல்வியில் முடிந்ததால் வேதனையில் இருந்த வந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

Tags

Next Story