பூதப்பாண்டியில் வாலிபர் தற்கொலை

பூதப்பாண்டியில் வாலிபர் தற்கொலை

தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம், பெரிய விளை பகுதியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் அருகே பெரிய விளை பகுதியை சேர்ந்தவர் ஜெபஸ்டின் (33). இவர் தனது வீட்டில் சுமார் பத்து மாதங்களுக்கு முன்பு சண்டை போட்டுவிட்டு வெளியே சென்றுள்ளார்.அதன் பிறகு அவரது வீட்டில் எந்த ஒரு தொடர்பும் வீட்டில் இல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் பூதப்பாண்டியை அடுத்துள்ள அசம்பு பகுதியில் உள்ள ஒரு தனியார் எஸ்டேட்டில் விஷம் அருந்தி விட்டு அருகில் உள்ள நபரிடம் கூறியுள்ளார்.

அவர்கள் உடனே தனியார் வாகனம் மூலம் பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து ஜெபஸ்டினுடைய தாயார் தங்கம்மாள் பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags

Next Story