குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை
சேலம் மாவட்டம், சித்தாரனூர் பகுதியில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராற்றில் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், சித்தாரனூர் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம் (34). இவரது மனைவி ரூபாஸ்ரீ. இவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக ரூபாஸ்ரீ கோபித்துக்கொண்டு, அவரது தந்தை வீட்டுக்கு சென்று விட்டார். தொடர்ந்து ஜீவானந்தம் மனவேதனையில் வீட்டில் இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜீவானந்தம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் அறிந்த இரும்பாலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story