தெப்பக்குளத்தில் தவறி விழுந்து வாலிபர் பலி
தெப்ப குளத்தில் வீழந்தவர் பலி
தூத்துக்குடி நகரின் மத்திய பகுதியில் உள்ள சிவன் கோவில் தெப்பக்குளத்தில் தவறி விழுந்த வாலிபர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி நகரின் மத்திய பகுதியில் உள்ளது சிவன் கோவில் தெப்பக்குளம். இந்த தெப்பக்குளத்தின் சுற்று சுவற்றில் அமர்ந்து சில வாலிபர்கள் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது தூத்துக்குடி ஜெய்லானி தெருவை சேர்ந்த அசன் அலி என்ற நல்லி என்பவர் தெப்பக்குளத்தில் தவறி விழுந்துள்ளார். அப்போது உயிருக்கு போராடிய அவரை அவரது நண்பர்கள் காப்பாற்ற முயன்ற போது அவர்களால் காப்பாற்ற முடியாததால் தண்ணீரில் மூழ்கினர். தொடர்ந்து தூத்துக்குடி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை தீவிரமாக தேடினர் உடலை மீட்க முடியாத நிலையில் ஆழ்கடலில் சென்று முத்து எடுக்க பயன்படுத்தப்படும் ஆக்சிசன் சிலிண்டர் மூலம் 2 மணி நேரத்திற்கு மேலாக தீயணைப்பு துறை வீரர்கள் போராடி உடலை மீட்டனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மத்திய பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி தெப்பக்குளத்தில் ஒருவர் தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story