பைக் விபத்தில் வாலிபர் பலி
வாலிபர் பலி
புதுக்கோட்டை மாவட்டம், ஆளப்பிறந்தான் பகுதியில் இருசக்கர வாகன விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கி அருகே காரைக்குடி சாலையில் உள்ள ஆளப்பிறந்தான் கிராமத்தில் உள்ள புளிய மரத்தில் பைக் மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதில், இறந்தவர் காரைக்குடியை சேர்ந்த சங்கர் மகன் வினோத் (30) என்பதும் தெரியவந்தது. அவர் எதற்காக அறந்தாங்கி சாலையில் வந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story