பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டு சிறை !

பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டு சிறை !

நீதிமன்றம்

பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டு சிறை என சேலம் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கினர்.

சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கவிதா (வயது 45). இவர் கடந்த 2016-ம் ஆண்டு திருவாக்கவுண்டனூர் பகுதியில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த மல்லூர் தாசநாயக்கன்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (30) என்பவர் கவிதா அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டார். இதுகுறித்து சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு 2-வது கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் பெண்ணிடம் நகை பறித்த குற்றத்திற்காக மணிகண்டனுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட்டு தினேஷ்குமரன் தீர்ப்பு அளித்தார்.

Tags

Next Story