வாலிபர் வெட்டி கொலை: நள்ளிரவில் பயங்கரம்

வாலிபர் வெட்டி கொலை: நள்ளிரவில் பயங்கரம்
X

தூத்துக்குடியில் கொலை

தூத்துக்குடியில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார்

தூத்துக்குடி செல்சினி காலனியைச் சேர்ந்தவர் சுடலைமுத்து மகன் பால் மணி (50). இவரது மனைவி உஷா, குடும்ப தகராறு காரணமாக கணவரை புரிந்து கடந்த 2 ஆண்டுகளாக கோரம்பள்ளம் தெய்வக்கனி நகரில் வசித்து வருகிறார். அப்போது தென்காசி மாவட்டம் பிரானூர் செல்வ விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த செந்தூரப் பாண்டியன் மகன் பரமசிவம் (38) என்பவருடன் சேர்ந்து அரிசி முறுக்கு கம்பெனி வைத்து நடத்தி வந்தார்.

இதையறிந்த பால்மணி தனது மனைவி உஷாவுடன் பரமசிவம் கள்ள தொடர்பில் இருப்பதாக கருதி அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினாராம். நேற்று இரவு 10 மணி அளவில் பரமசிவம் தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த பால் மணி, அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், கொலை செய்யப்பட்ட பரமசிவம் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து பால் மணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் நள்ளிரவில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

Tags

Next Story