குழந்தை இல்லாத ஏக்கத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

குழந்தை இல்லாத ஏக்கத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
தற்கொலை
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், வேதநகர், மேலத் தெருவை சேர்ந்தவர் அகஸ்டஸ் மைக்கேல் (35). இவருக்கு ஸ்டெல்லா மேரி என்ற மனைவி உண்டு. இவர்களுக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகளாகியும் இதுவரையிலும் குழந்தைகள் இல்லை. இதனால் மன உளைச்சல் அடைந்த அகஸ்டஸ் மைக்கேல் மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வது வழக்கமாக இருந்து வந்தது.

நேற்றும் அகஸ்டஸ் மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் சண்டை போட்டுவிட்டு, பின்னர் படுக்கை அறைக்கு சென்று கதவை பூட்டியுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் கதவை திறக்கவில்லை. இதனால் உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அகஸ்டஸ் மைக்கேல் மின்விசிறியில் தூக்கு போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.

இது குறித்து கோட்டார் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story