விபத்தில் வாலிபர் உயிரிழப்பு - போலீசார் விசாரணை

விபத்தில் வாலிபர் உயிரிழப்பு - போலீசார் விசாரணை

பைல் படம் 

திண்டிவனம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ஒலக்கூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டிவனம் வட்டம், எண்டியூா், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பாண்டு ரெங்கன் மகன் ஆனந்த் (35). பொக்லைன் ஆபரேட்டரான இவா், திங்கள்கிழமை திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் அடுத்துள்ள சாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த காா் மோதியதில் பலத்த காயமடைந் ஆனந்த் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின்பேரில், ஒலக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Tags

Next Story