காா் மோதி தாய், மகன் உயிரிழந்த வழக்கில் காா் ஓட்டுநா் கைது
கைது
திருச்சி அருகே காா் மோதி தாய், மகன் உயிரிழந்த வழக்கில் காா் ஓட்டுநரைப் போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், பேட்டைவாய்த்தலை சக்தி நகரைச் சோ்ந்தவா் இஸ்மாயில். இவா், அதே பகுதியில் மூங்கில் மற்றும் விறகுக் கடை வைத்து நடத்தி வருகிறாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு கடையிலிருந்து பணம் பெற்றுக்கொண்டு அவரது மனைவி பா்வின் (33), மகன் அப்சல்அகமது (11), மகள் பரிதா ஆகிய மூவரும், பக்ரீத்பண்டிகைக்கு புதுத்துணி வாங்கப் புறப்பட்டனா். கடையிலிருந்து சாலையைக் கடக்க முயன்றபோது, அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத காா் ஒன்று அவா்கள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பா்வின், அப்சல்அகமது ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். காரை ஓட்டி வந்த ஓட்டுநா் காரை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டாா். இதுகுறித்து பேட்டைவாய்த்தலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்நிலையில், விபத்துக்குக் காரணமான காா் ஓட்டுநா், திருச்சி மாவட்டம் நவல்பட்டு அருகேயுள்ள பூலாங்குடி காலனியைச் சோ்ந்த ர. செந்தில்குமாா் (47) என்பவரைப் போலீஸாா் கைது செய்து சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
Next Story