அரசு பஸ் மோதி வாலிபர் பலி!

அரசு பஸ் மோதி வாலிபர் பலி!

விபத்து 

அரசு பஸ் மோதி வாலிபர் பலி. போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.
திருமயம்: திருப்பத்துார் அருகே மணக்குடியில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் தினேஷ் (21). சம்பவத்தன்று லெனாவிலக்கில் உள்ள நண்பரை பார்க்க பைக்கில் சென்றார். திருமயம் ஏனப்பட்டி சர்ச் அருகே சென்ற போது மதுரையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த தினேஷ் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். நமணசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து அரசு பஸ் டிரைவர் கீழடியை சேர்ந்த கண்ணன்(40) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags

Next Story