கஞ்சா கடத்திய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
பைல் படம்
காஞ்சிபுரம் அருகே 22 கிலோ கஞ்சா கடத்திய ஆந்திர வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
காஞ்சிபுரம் அருகே 22கிலோ கஞ்சாவை பையில் மறைத்து கடத்தி வந்ததாக ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த பட்டின வெங்கட கிருஷ்ணா மீது வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கின் விசாரணை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.ஜூலியட் புஷ்பா ஆந்திர வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
Next Story