வாழைப்பழ வியாபாரி உள்பட 2 பேரை கத்திரிக்கோலால் குத்திய வாலிபர் கைது

வாழைப்பழ வியாபாரி உள்பட 2 பேரை கத்திரிக்கோலால் குத்திய வாலிபர் கைது

பைல் படம் 

விழுப்புரத்தில் வாழைப்பழ வியாபாரி உள்பட 2 பேரை கத்திரிக்கோலால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் வி.மருதூர் குப்பு சாமி முதலியார் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 49). இவர் நேற்று இரவு விழுப்புரம் உழவர் சந்தை எதிரே தள்ளு வண்டியில் வாழைப்பழம் வியா பாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப் போது அங்கு வந்த ஒருவர், சரவணனிடம் 2 செவ்வாழை பழங்களை வாங்கியுள்ளார். அதற்கு சரவணன், ரூ.30 தரும்படி கேட்டுள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த அந்த நபர், 2 பழங்களுக்கு இவ்வளவு தொகையா எனக்கேட்டுதான் வைத்திருந்த கத்திரிக்கோலை எடுத்து சரவணனின் பின்பக்க தலையில் குத்தினார். இதை தடுக்க வந்த சரவணனின் நண்பரான வி.மருதூரை சேர்ந்த காமராஜ் (48) என்பவருக்கும் கத்திரிக்கோல் குத்து விழுந்தது.

உடனே அருகில் இருந்த பொதுமக்கள், அந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்து விழுப்புரம் நகர போலீசாரிடம் ஒப்படைத்தனர். காயமடைந்த 2 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில், கேரள மாநிலம் மலப்புரத்தை அடுத்த எடப்பல் கோலாளம் பகுதியை சேர்ந்த இப்ராஹீம் மகன் முகமது சாதிக் (24) என்பதும், கடந்த சில மாதமாக விழுப்புரம் காந்தி சிலை அருகில் உள்ள ஒரு ஓட்டலில் சப்ளையராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. தொடர்ந்து, முகமது சாதிக்கை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story