இடையூறு ஏற்படுத்தும் வகையில் பைக் சாகசம் - இளைஞர்கள் கைது
பறிமுதல் செய்யப்பட்ட பைக்
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் மற்றும் விபத்து ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தை ஓட்டினாலோ அல்லது சாகசம் செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டாலோ அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் தூத்துக்குடி பிரையன்ட் நகர் பகுதியைச் சேர்ந்த பிரவீன் ராஜ் என்ற இளைஞர் அதிநவீன இருசக்கர வாகனத்தில் துறைமுக சாலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் விபத்து ஏற்படுத்தும் வகையிலும் அதிக வேகம் மற்றும் அதிக ஒலி எழுப்பி சாகசம் செய்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதை தொடர்ந்து தென்பாகம் காவல்துறையினர் சமூக வலைதளத்தில் பைக் சாகசம் செய்து வெளியிட்ட பிரவீன் ராஜை கைது செய்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர் இதேபோன்று திருச்செந்தூரிலும் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட திருச்செந்தூர் அருகே உள்ள பரமன்குறிச்சி பகுதியைச் சேர்ந்த டைட்டஸ் டேனியல் என்ற வாலிபரையும் போலீசார் கைது செய்ததுடன் அவரது இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் பைக் சாகசத்தில் ஈடுபட்டு சமூக வலைதளத்தில் பதிவிட்ட இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.