வாலிபர் மர்ம மரணம் - உறவினர்கள் சாலை மறியல்

வாலிபர் மர்ம மரணம் - உறவினர்கள் சாலை மறியல்

முகமது

அதிராம்பட்டினத்தில் 4 நாட்களில் திருமணம் நடக்கவிருந்த வாலிபர் மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஆலடி தெருவை சேர்ந்த முகமது அன்சாரி. இவருடைய மகன் முகமது (வயது 27) இவர் அதிராம்பட்டினத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இரவு நேர மருந்தாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் 4 நாட்களில் திருமணம் நடக்க இருந்தது. சம்பவத்தன்று முகமது பட்டுக்கோட்டை செல்லும் போது புதுக்கோட்டை உள்ளூர் அருகே பைக்கில் இருந்து கீழே விழுந்து மயங்கி கிடந்தார். இதனால் ஆபத்தான நிலையில் இருந்த அவரை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முகமது செவ்வாய்க்கிழமை அதிகாலை இறந்தார்.

இது குறித்து முகமதுவின் சகோதரி ரிஸ்வானா அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது சகோதரர் சாவில் மர்மம் உள்ளது என்றும் உடனடியாக தீவிர விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் முகமதுவின் உறவினர்கள் திருச்சியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்ட முகமது வின் உடலை அதிராம்பட்டினம் காவல் நிலையம் எதிரில் வைத்து முற்றுகையிட்டு சாலையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். மேலும் முகமது சாவுக்கு காரணமானவர்களை கண்டு பிடித்து கைது செய்யும் வரை நாங்கள் கலைந்து செல்ல மாட்டோம் என்று கூறி உடலை அந்த இடத்திலேயே வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விபத்து நடந்த இடத்துக்கு சென்று அங்கு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story